spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில்!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? – சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில்!

-

- Advertisement -
kadalkanni

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் (மேசையைத் தட்டும் ஒலி) எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு கோசு மணி அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமென இங்கே பேசி அதற்கு நம்முடைய அமைச்சர் பெருமக்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால் சாதிவாரியான கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒன்றிய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி) அதற்கு திரு கோசு மணி அவர்கள் ஆதரவு தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ