spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

“தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

-

- Advertisement -

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ‘NExt’ என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (ஜூன் 13) கடிதம் எழுதியுள்ளார்.

மயிலாடுதுறையில் மது குடித்து இருவர் பலி! விசாரணையில் பகீர் தகவல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘NExT’ தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், ‘NExT’ தேர்வு முறையினை கைவிட வேண்டுமென்றும், தற்போது உள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ