spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.25 லட்சம் நிதியுதவி!

சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.25 லட்சம் நிதியுதவி!

-

- Advertisement -

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் திரு ராஜேஷ் (PC 699 SCPR), வயது 35, த/பெ. ரத்தினசாமி. என்பவர் நேற்று (09.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம் சீர்காழி நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காவலர் திரு ராஜேஷ் அவர்கள் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
காவலர் திரு ராஜேஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ