spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை அச்சிடனுமா?? ஸ்டாலின் கண்டனம்...

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை அச்சிடனுமா?? ஸ்டாலின் கண்டனம்…

-

- Advertisement -

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய மத்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது, ஆங்கிலத்தில் curd என எழுதி அதற்கு கீழ் தஹி (Dahi) என இந்தியில் அச்சிட வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தி இருந்தது. மேலும், வேண்டுமென்றால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவின் தயிர் பாக்கெட்

we-r-hiring

மத்திய அரசு நிறுவனமான FSSAI-க்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள அவர், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’#இந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், இந்தியில் ‘தஹி’ என அச்சிட இயலாது மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ