spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருக்கோவிலூரில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் திருமலை (20) என்பவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ஜெயராம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளான். கல்லூரி விடுமுறை என்பதால் விடுதியில் இருந்து அவரது சொந்த வீட்டிற்கு வந்துள்ளான். திடீரென நேற்று மாலை வீட்டில் இருந்த புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளான்.

we-r-hiring

உறவினர்கள் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கல்லூரி விடுப்பில் இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ