
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது கனி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

விஜயின் பேச்சை பாராட்டிய இயக்குனர் கரு பழனியப்பன்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது கனி, புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, கடந்த 1984- ஆம் ஆண்டு முதல் 1989- ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். பின்னர், 1997- ஆம் ஆண்டு முதல் 2002- ஆம் ஆண்டு வரை நகர்மன்றத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதக் காலங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூன் 17) இரவு உயிரிழந்துள்ளார்.
விமர்சனங்களை தாண்டி வசூலில் சாதிக்கும் ஆதிபுருஷ்!
அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.