
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், 11- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு, சுடுமண் முத்திரை ஆகியவைக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சீன நாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு, காசுகளை உருவாக்கும் அச்சு உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு
தமிழ்நாட்டுடன், சீன வணிகத் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்திருப்பதாகத் தகவல் கூறுகின்றனர்.

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் பல்வேறு கட்டங்களாக தமிழக அரசு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது
இதில், தமிழரின் பாரம்பரியம், பெருமையைப் பறைச்சாற்றும், வீர விளையாட்டுகள் உள்ளிட்டவைக் குறித்த அரியப் பொருட்கள் கிடைத்துள்ளது. அகழாய்வில் இதுவரை 4,000- க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.


