
தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்ததில் தொழிலாளர்கள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!
கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மிகப்பெரிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஆந்திரா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நான்கு பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நேரிட்டப் பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்தனர்.
31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, “காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்; ஆக்கிரமிப்பு இருந்தாலும், தவறு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கோவை காவல்துறையினர், ஒப்பந்ததாரர் சீனிவாசன், திட்ட மேலாளர் சாதிக் குல் அமீர், பொறியாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.