Homeசெய்திகள்தமிழ்நாடுகுன்னூர் : ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை’ விழிப்புணர்வு பேரணி துவக்கம்

குன்னூர் : ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை’ விழிப்புணர்வு பேரணி துவக்கம்

-

- Advertisement -

குன்னூரில் தேர்தல் விழிப்புணர்வு ‘பிங்க்’பிரச்சார பேரணியை கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார்.​குன்னூர் : ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை’விழிப்புணர்வு பேரணி துவக்கம்குன்னூர் : இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி குன்னூரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ​அதன் ஒரு பகுதியாக குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிம்ஸ் பூங்கா முன்பாக நேற்று சிறப்பு ‘பிங்க்’ தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

we-r-hiring

இதில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை’என்பதை வலியுறுத்தும் வகையில், ஏப்ரல் 23 அன்று அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்வைக்கப்பட்டது.

வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்

 

MUST READ