Homeசெய்திகள்தமிழ்நாடுவணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது - இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்

வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்

-

- Advertisement -

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில்  ரூ 10,000 தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை பட்டியல்களில் இணைத்துக் கொள்ளலாம் என்று பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது - இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்பாஜக கட்சி தொடங்கி 46 ஆண்டுகள் முடிந்து 47 வந்து ஆண்டுகள் நேற்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ராம ஜென்ம பூமி கோயில் கட்டியது, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கொண்டு வந்தது, 370 வது சட்டப்பிரிவை நீக்கியது என்று பாஜக ஆட்சியில் நடந்தவற்றை பெருமையாக பேசினார்.

ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் ரூ 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் அறிவித்து கோடிக்கணக்கான மக்களை தெருவில் நிற்க வைத்ததை மறந்து விட்டார்.

we-r-hiring

ஆசியா கண்டத்தில் இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா போன்று 48 நாடுகள் உள்ளது. இதில் இந்தியாவும், சீனாவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இந்த நாடுகளுக்கு எல்லாம் ஒரு காலத்தில் இந்தியா தலைமை தாங்கி வழி நடத்தியது. உலகில் எங்கே பிரச்சனை எழுந்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த காலம் இருந்தது. ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்காவின் கருத்தே இந்தியாவின் கருத்து, அமெரிக்கா பிரதமர் என்ன சொல்கிறாரோ அதற்கு மறுப்பு சொல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிற பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார்.

ரஷ்யா விடம் எண்ணெய் வாங்க கூடாது என்று இந்தியாவிற்கு அமெரிக்கா உத்தரவிடுகிறது , அதை அப்படியே ஏற்று நடைமுறை படுத்துகிறார் பிரதமர் மோடி. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்கிற புதிய கொள்கையை வகுத்து அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி இருப்பது பாஜக ஆட்சியின் சாதனை என்றே சொல்லலாம்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரில் ஆசியா கண்டம் எரிபொருள் பற்றாக்குறையினால் பெரும் பாதிப்படைந்துள்ளது. வங்கதேசத்திடம் இருந்த எரிபொருள் முற்றிலும் தீர்ந்து போய்விட்டது. மாலை 6 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரக்கூடாது என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக சிலிண்டர் கிடைக்காமல் டீ கடைகள், சின்னச் சின்ன நடைப்பாதை உணவகங்கள், ஹோட்டல்கள் என்று பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது. திறந்து இருக்கும் சில கடைகள் 6000, 7000 ரூபாய் கொடுத்து சிலிண்டர்கள் வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இன்னும் சில இடங்களில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 10,000 ரூபாய் என்று மிரட்டுகிறார்கள். இந்த நிலை தெற்கு ஆசியா முழுவதும் இருந்து வருகிறது.

இந்தியா மேற்கித்திய எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினராக  ஈரான், ஐக்கிய அரபு, சவுதி அரேபியா இருந்து வருகிறது. இந்த நாடுகளுக்குள் மோதல் ஏற்படும்போது தூர நின்று வேடிக்கை பார்க்கும் நாடாக இந்தியா உள்ளது. அந்த மூன்று நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண சிறிய அளவில் கூட முயற்சி செய்யவில்லை. இந்தியாவின் பிரதமரும், அரசும் எவ்வித முயற்சியும் செய்யாமல் முடங்கி இருந்தால் வணிகர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் துயரத்திற்கு ஆளாகுவார்கள்.

34 வது நாளாக தொடரும் போர் – ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

MUST READ