
தமிழகத்தில் பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!
அந்த கடிதத்தில், நடப்பு அறுவடைப் பருவத்தில் பருத்தியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால், பருத்தி விவசாயிகள் மோசமான நிலையை எதிர்க்கொண்டிருக்கின்றனர். கடந்தாண்டு ஒரு குவிண்டால் பருத்தியை 12,000 ரூபாய்க்கு விற்று அதிக லாபம் ஈட்டிய பருத்தி விவசாயிகள், இந்தாண்டும் பருத்திச் சாகுபடியைத் தேர்வு செய்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது பருத்தியின் விலை குவிண்டாலுக்கு 5,500 ரூபாய் என கடுமையாக சரிந்திருப்பதால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேளாண் விளைப்பொருட்களின் சந்தை விலையை நிலைப்படுத்துவதில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை முக்கிய பங்கு வகிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
2023- 2024 ஆம் நிதியாண்டிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக நடுத்தர இழைப் பருத்திக்கு குவிண்டாலுக்கு 6.620 ரூபாயும், நீண்ட இழைப் பருத்திக்கு 7,020 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் பருத்தி அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் பருத்தி விலை குவிண்டாலுக்கு 5,500 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!
இதனை கருத்தில் கொண்டு பருத்தி கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்க வேண்டும். பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 01- ஆம் தேதியில் இருந்து அமல்படுத்த உழவர் நல அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.