- Advertisement -

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 190.08 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் வரும் ஜூலை 10- ஆம் தேதி முதல் ஜூலை 15- ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு விநாடிக்கு 440 கனஅடி வீதம் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நணைப்புக்கும், குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்யும் பொருட்டும் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.