Homeசெய்திகள்தமிழ்நாடு"தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலை"- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!

“தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலை”- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!

-

 

"தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலை"- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!
File Photo

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. புயலால், பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

டிச.6ல் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் – கார்கே அழைப்பு..

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா ஆகியோருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தாம்பரம், கோவளம் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 290 முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், 2,194 மின்துறை பணியாளர்கள் தயார் நிலை வைக்கப்பட்டுள்ளனர்.

புயலுக்கு பிறகு செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!

வெள்ளம் தேங்கும் பகுதிகளில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. மூவரசம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் நீர் சாலை வழியாக செல்ல கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ