
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா மாநில அரசைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும், காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை எனக்கூறி, காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் இன்று (அக்.11) காலை 06.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், வணிகர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.
காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும் கடையடைப்புப் போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கறம்பக்குடி, நெடுவாசல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, கந்தர்வக்கோட்டையில் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சாலை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..
அதேபோல், திருச்சி மாவட்டத்தில் லால்குடியிலும், அரியலூர் மாவட்டத்தில் த.பழூர் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.