
ஜூன் 04ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், வருகிற ஜூன் 01ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள்-கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற 1-6-2024 காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.