
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

பார்சல் உணவில் பிளேடு துண்டு….உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது உணவுப் பாதுகாப்புத் துறை!
இதனிடையே பேட்டியளித்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு, “அவதூறாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க.வில் இருந்து நீக்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி
குஷ்பு குறித்து அவதூறாகப் பேசியது சர்ச்சையான நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவதூறு பேச்சு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கும் என குஷ்புத் தெரிவித்திருந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.