Homeசெய்திகள்தமிழ்நாடுசிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள்!

சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள்!

-

- Advertisement -

 

சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள்!

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சிறையிலடைக்கப்பட்டனர்.

பத்ம விருது வென்ற வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு அன்புமணி வாழ்த்து

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்னைத் துன்புறுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து, ஆண்டோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் தலைமறைவாகினர்.

இதையடுத்து, அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படையை அமைத்துத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஜன.25) ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படைக் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகள்!

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஆண்டோ மதிவாணன், மெர்லினா தம்பதியை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த தம்பதியை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

MUST READ