spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை- இடிக்கப்பட்ட தீண்டாமை சுவர்!

தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை- இடிக்கப்பட்ட தீண்டாமை சுவர்!

-

- Advertisement -

 

தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை- இடிக்கப்பட்ட தீண்டாமை சுவர்!

we-r-hiring

திருப்பூர் மாவட்டத்தில், சேவூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் செய்தி எதிரொலியாக இடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!

சேவூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தேவேந்திரன் நகர் பகுதிக்கும், விஐபி கார்டன் குடியிருப்புப் பகுதிக்கும் நடுவே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் குறித்து தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் செய்திதாள்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, தி.மு.க.வின் மக்களவைத் தேர்தல் அறிக்கை குழு கருத்துக் கேட்கும் போது, தீண்டாமை சுவர் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டுமென தேவேந்திரன் நகர் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக, தி.மு.க. எம்.பி. கனிமொழியின் வலியுறுத்தல் மற்றும் ஆட்சியரின் உத்தரப்படி, சுமார் ஒரு மணி நேரத்தில் தீண்டாமை சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!

தீண்டாமை சுவரால் தேவேந்திரன் நகர் பகுதி மக்கள், பிரதான சாலைக்கு செல்ல மிகுந்த சிரம்மங்களைச் சந்தித்து வந்தனர். தற்போது சுவர் இடிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சித் தெரிவித்தனர்.

MUST READ