Homeசெய்திகள்தமிழ்நாடுடிஆர்பி ராஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி- டி.ஆர்.பாலு

டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி- டி.ஆர்.பாலு

-

- Advertisement -

டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி- டி.ஆர்.பாலு

அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

TRB Raja

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர். பாலு, “முதலமைச்சரின் அறிவுரைப்படி சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். சிறப்பாக பணியாற்றி முதலமைச்சரின் உள்ளத்தில் டிஆர்பி ராஜா இடம்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். பூண்டி கலைவாணன் என் நண்பர், எங்கள் மாவட்ட செயலாளர். டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் ஆகியிருப்பதற்கு பூண்டி கலைவாணன்தான் முக்கிய காரணம்.டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி. டெல்டா மாவட்டத்திற்கு மேலும் அமைச்சர்களை தர வேண்டும் என கோரிக்கை வைப்பேன்” என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றார். மன்னார்குடி தொகுதியில் இருந்து 3வது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டிஆர்பி.ராஜா. அமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடதக்கது.

MUST READ