spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?

9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?

-

- Advertisement -

9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. சளி, இருமல், தசைவலி ஆகியவை அறிகுறிகளாக காணப்படும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எட்டு பேருக்கு H1 N1 வைரஸ் இருப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவிவருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. அதே சமயம் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் காய்ச்சல் எதிரொலியால் பொதுத்தேர்வு எழுதும் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. காய்ச்சல் பரவிவருவதை அடுத்து ஆண்டு தேர்வை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 17 ஆம் தேதியே தொடங்க ஆலோசனை நடத்திவருகிறது.

MUST READ