Homeசெய்திகள்தமிழ்நாடு"தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்"- சு.வெங்கடேசன் எம்.பி.விமர்சனம்!

“தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்”- சு.வெங்கடேசன் எம்.பி.விமர்சனம்!

-

 

"தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்"- சு.வெங்கடேசன் எம்.பி.விமர்சனம்!

தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.

‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி 27- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு நேரில் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தோப்பூரில் இன்று (மார்ச் 05) எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை எல்&டி நிறுவனம் தொடங்கியுள்ளது.

சுமார் 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க கட்டுமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கீழ்த்தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது.

இது குறித்து விமர்சித்துள்ள மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது!

அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ