Homeசெய்திகள்தமிழ்நாடுமழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்...மின்துறை அமைச்சர் அறிவிப்பு

மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்…மின்துறை அமைச்சர் அறிவிப்பு

-

மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்...மின்துறை அமைச்சர் அறிவிப்புபேயாட்டம் ஆடிவரும் மிக்ஜம் புயலால் சென்னைவாசிகள் அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே மழையால் நகரமே இருளில் மூழ்கி இருந்தது. இதில் நேற்று இரவில் இருந்தே சென்னையின் பல இடங்களில் மின்சார இணைப்பு இல்லாததால் வீட்டில் சமையல் செய்தல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட இடையூறு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக கோர தாண்டவத்தை ஆடி வருகிறது மிக்ஜம். சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார இணைப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். விடாது கொட்டி வரும் கன மழை நின்றவுடன் இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தற்போது மக்கள் அவசர தேவைக்காக மெழுகுவர்த்திகள் மற்றும் எமர்ஜென்சி விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்...மின்துறை அமைச்சர் அறிவிப்புஇருப்பினும் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமான மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பது மேலும் ஒரு சவாலாக மாறி உள்ளது. ஆங்காங்கே மின்கம்பங்கள் சரிந்துள்ளன மற்றும் வீடுகளுக்குள்ளும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார இணைப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் இவை அனைத்தும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தா வண்ணம் சரி செய்த பின்னர் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. எனவே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுடைய மின் இணைப்பை ஆஃப் செய்து வைத்திருப்பது அவசியம். மழை நின்ற பின் வீட்டின் அனைத்து மின் இணைப்புகளையும் ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் மெயின் ஸ்விட்சை ஆன் செய்து கொள்ள வேண்டும்.

MUST READ