spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதுமலை தெப்பக்காடு முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்... வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு,...

முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்… வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு வழங்கல்!

-

- Advertisement -

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வனத்துறை சார்பில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு மற்றும் பழ வகைகள்  வழங்கப்பட்டன.

we-r-hiring

தை மாதம் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். யானைகள் முகாம் வளாகத்தில் பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு அதிகாரிள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து, உணவு மாடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு யானைகளுக்கு, பொங்கல் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. குறிப்பாக செங்கரும்பு, தர்பூசணி, அன்னாசி, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பல வகைகளும் ஊட்டச்சத்து உணவு மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கபட்டது.

மாட்டுப்பொங்கல் அன்று தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவதால் இதை காண தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர் . முன்னதாக பொங்கல் பண்டிகையை ஒட்டி உரியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும், குரும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

MUST READ