Homeசெய்திகள்தமிழ்நாடுபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2- ஆம் தேதி தொடக்கம்!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2- ஆம் தேதி தொடக்கம்!

-

- Advertisement -

 

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2- ஆம் தேதி தொடக்கம்!
File Photo

பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று (மே 05) முதல் ஜூன் 6- ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி

கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம். இந்த நிலையில், தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2- ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

“ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

பொதுப்பிரிவினருக்கான் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 7- ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ரேண்டம் எண் ஜூன் 7-ல் வெளியாகும் நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12- ஆம் தேதி முதல் ஜூன் 30- ஆம் தேதி வரை நடக்கிறது. பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12- ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ