
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி யார்டு (Avadi Yard) பகுதியில் சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் 15 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாகவும், 10 புறநகர் மின்சார ரயில்கள் பகுதி அளவில் ரத்துச் செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!
அதன்படி, பிப்ரவரி 17- ஆம் தேதி சென்னை கடற்கரை- ஆவடி மின்சார ரயில், சென்னை கடற்கரை- பட்டாபிராம் மின்சார ரயில், மூர் மார்க்கெட்- அரக்கோணம் மின்சார ரயில், மூர் மார்க்கெட்- ஆவடி மின்சார ரயில், அரக்கோணம்- மூர் மார்க்கெட் மின்சார ரயில், திருவள்ளூர்- ஆவடி மின்சார ரயில், பட்டாமிராம் மிலிட்டரி- மூர் மார்க்கெட் மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி- ஆவடி மின்சார ரயில் உள்ளிட்ட 10 மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!
பிப்ரவரி 18- ஆம் தேதி ஆவடி- சென்னை கடற்கரை மின்சார ரயில், மூர் மார்க்கெட்- ஆவடி மின்சார ரயில், ஆவடி- மூர் மார்க்கெட் மின்சார ரயில் உள்ளிட்ட 5 மின்சார ரயில்கள் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 10 மின்சார ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தைத் தவிர்க்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.