Homeசெய்திகள்தமிழ்நாடுவிஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..

விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..

-

தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (53), முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லூர்து பிரான்சிஸ் இன்று மதியம் 12.30 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்தபோது, தீடீரென அலுவலகத்துக்குள் நுழைந்த 2 பேர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில், விஏஓ லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..

இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, அவரது குடும்பத்திற்கு எனக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இது போன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி இவ்வரசை சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன்.

அதற்கு இவ்வரசு பாராமுகமாய் இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.  ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? நாடக அரசியலை மட்டுமே கவனம் செலுத்தும் இந்த அரசின் முதல்வர் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திட்டவட்டமாக வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

MUST READ