spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

-

- Advertisement -

EPS - எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தை இடித்த திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசுலாமிய சிறுபான்மையினர் அறக்கட்டளை (அப்போதைய) பேரூராட்சி நிலத்தை குத்தகைக்குப் பெற்று ‘இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி’ நடத்தி வந்த நிலையில், அந்நிலத்தை மேற்படி சிறுபான்மையினர் அறக்கட்டளைக்கு மாற்றுவது தொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் இருக்கின்ற போதும் ,நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் SLP தாக்கல் செய்யப்பட்டு Diary எண் வழங்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் நிலையிலும் , 2.1.2024 அன்று அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பள்ளியை காலி செய்து 7 நாட்களுக்குள் நிலத்தை ஒப்படைக்க நோட்டிஸ் வழங்கியுள்ளார்.

பெண்கள் மேல்நிலைப்பள்ளி மார்ச் மாதம் +2 மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அரசு தேர்வுகளுக்காக முழு மும்முரமாக பணியாற்றி வரும் சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீட்டிற்கு தாக்கல் செய்யப்பட்டு, Diary எண் வழங்கப்பட்ட நிலையிலும், சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் விடியா திமுகவின் உள்ளூர் நிர்வாகியின் தலையீட்டில், நகராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக் கூறிக்கொண்டு,பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தை பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, நீதிமன்ற அமீனா இல்லாமல் , எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், 11/1/2024 காலை 6 மணிக்கு காவல்துறையின் உதவியுடன், புல்டோசர் வைத்து திமுகவினரின் தூண்டுதலால் பள்ளியின் மேற்கூரையை இடித்து பள்ளிக்கு சீல் வைத்துள்ளனர். இதை செய்த நகராட்சி நிர்வாகத்திற்கும், விடியா திமுக அரசின் முதல்வர் திரு. @mkstalin -க்கும் எனது கடும் கண்டங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ