Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது

-

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு-வை சென்னை செல்ல விடாமல் திருச்சியில் தடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது

சங்கத்தின் மாநில தலைவர் எந்த நேரமும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எங்கு வேண்டுமானாலும் பேசலாம், போராட்டம் நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கும் போது, காவல்துறை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்வது நியாயமா..? இது ஜனநாயக நாடா..? சர்வாதிகார நாடா..? என்று கேட்டுள்ளார்.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாரத பிரதமர் மோடி 2014, 2019 ஆம் ஆண்டுகளில் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P.அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் விவசாயிகள் 22.05.2024 புதன்கிழமை முதல் 30.05.2024 வியாழக்கிழமை வரை காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாகவோ, அல்லது பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பாகவோ, அல்லது சாஸ்திரி பவன் முன்பாகவோ, அல்லது தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் அலுவலகமான தலைமை செயலகம் முன்பாகவோ காத்திருப்பு போராட்டம் நடத்த 22.05.2024 ஆம் தேதி திருச்சியில் உள்ள மாநில தலைவர் தனது வீட்டில் இருந்து கிளம்பி சென்னை செல்ல இருந்த நிலையில் காவல்துறையினர் கரூர் பைபாஸ் சாலையில் வைத்து மாநில தலைவரை கைது செய்தனர்.

MUST READ