spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் இறுதி ஆய்வு இன்று தொடக்கம்…

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் இறுதி ஆய்வு இன்று தொடக்கம்…

-

- Advertisement -

பூந்தமல்லி  – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் இறுதி ஆய்வு  இன்று தொடக்கம்…பூந்தமல்லி  – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் 3  நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.

பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து முதல் இரண்டு நாளும் மூன்றாவது நாள் மெட்ரோ ரயிலை 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. முற்கட்டமாக பூந்தமல்லி  முதல் வடபழனி வரை ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆய்வறிக்கை ஒன்றிய அரசிடம் சமா்பிக்கப்பட்ட பின் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

we-r-hiring

ரயிலில் உள்ள பயணிகள் அவசர காலங்களில் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளும் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் புகை கண்டறியும் கருவிகள், ரயிலின் அடியில் உள்ள உபகரணங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் ரயிலின் இழுவை அமைப்பு (traction system) ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ரயில்கள் மோதிக் கொண்டால், எத்தனை பெட்டிகள் சேதமடையும் என்பதை அறிய, அதன் உருவகப்படுத்துதல் வடிவமைப்பையும் (simulation design) ஆய்வு செய்கிறார். அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவதற்கு எவ்வளவு தூரம் தேவைப்படுகிறது என்பதை அறிய, அவசர கால பிரேக்குகளைப் பயன்படுத்தியும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் பணி; கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

 

 

MUST READ