

அம்பாசமுத்திரம் அருகே சிறு சேமிப்புகளைக் கொண்டு கிராம மக்கள் விமானத்தில் பறந்தனர்.
இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
நெல்லை மாவட்டம், தாட்டான்பட்டி கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், விமானத்தில் பறக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் விரும்பினர். அதன்படி, அதற்காக சிறு சேமிப்புகளை செய்து வந்தனர். புனித பயணமாக விமானம் மூலம் கோவா சென்று சவேரியார் ஆலயம் செல்லத் திட்டமிட்டனர்.
இதற்கான விமான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகளை அருளகம் பங்குத்தந்தை எட்வர்ட் ராயன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அதன்படி, தாட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 130 பேர் விமானத்தில் புறப்பட்டனர்.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!
விமானத்தில் செல்லும் அவர்கள் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து ரயில் மூலம் நெல்லைக்கு வருகின்றனர். 10 ஆண்டுகள் இதற்கான சேமிப்புகளை அக்கிராம மக்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது அருகில் உள்ள கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


