மெரினாவில் மீனவர்கள் போராட்டம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை கடற்கரை சாலையில் நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, கடைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக பேரவையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மீனவர்களுடன் 4 மணிநேரம் பேசியுள்ளோம். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறிய அளவில்நான நடவடிக்கையே இது, மீனவர்களின் பிரச்சனை இன்று காலையோடு முடிவுக்கு வந்துவிட்டது, முதலமைச்சரால் மீன் கடை பிரச்சனைக்கு நல்ல முடிவு காணப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ மீனவர்களின் கோரிக்கையினை முதலமைச்சர் கருணையோடு பரிசீலித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.