Homeசெய்திகள்தமிழ்நாடுபூக்கள் விலை உயர்வு , விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்கள் விலை உயர்வு , விவசாயிகள் மகிழ்ச்சி

-

- Advertisement -

பூக்கள் விலை உயர்வு , விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு. விசேஷ தினங்களை யொட்டி வியாபாரிகள் வருகையால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் விசேஷ தினம் மற்றும் பக்ரீத் பண்டிகை யொட்டி பூக்களின் தேவைக்காக மலர் சந்தையில் வியாபாரிகள் குவிந்ததால் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவையில் திமுக முப்பெரும் விழா

இன்று அதிகாலை மார்க்கெட்டில்  ஒரு கிலோ மல்லிகைப்பூ  ரூபாய் 1200 க்கு விற்பனையானது இதனைத் தொடர்ந்து மல்லிகை பூக்கள் வரத்து குறைவு காரணமாகவும் வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாகவும் ரூபாய் 1200க்கு விற்பனையாகி கொண்டிருந்த மல்லிகைப்பூ ரூபாய் 1500 ஆக விற்பனையானது.

இதே போல் கனகாம்பரம் ரூபாய் ஆயிரத்திற்கும், முல்லைப் பூ ரூபாய் 400 முதல் ரூபாய் 500 வரையிலும், ஜாதிப்பூ (பிச்சிப்பூ) ரூபாய் 550 முதல் ரூபாய் 600 வரையிலும் விற்பனையாகிறது.

வரத்து குறைவாக காணப்பட்ட போதிலும் விசேஷ காலங்களை யொட்டி மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ