Homeசெய்திகள்தமிழ்நாடுகொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு, நேர்காணலில் 40 சதவீத மதிப்பெண்கள் முன்னுரிமை- அமைச்சர்

கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு, நேர்காணலில் 40 சதவீத மதிப்பெண்கள் முன்னுரிமை- அமைச்சர்

-

- Advertisement -

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு.

அதன்படி, 100 சதவீதம் அவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

we-r-hiring

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் 1200 கோடிக்கான காசோலையை  யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளரிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், 2009-ஆம் ஆண்டு கலைஞரால் தொடங்கப்பட்ட ”உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வரின் காப்பீடு” திட்டத்தை தமிழ்நாடு அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். கடந்த ஆண்டு, ஜனவரி 10-ஆம் தேதியன்று,  5 ஆண்டிற்கு இந்த திட்டம் நீடிக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டில் மட்டும் இதன் மூலம் 1.39 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 843 ரூபாய் என்ற வகையில் 1128 கோடி ரூபாய் செலவிடப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஓராண்டில் மட்டும் 7.49 லட்சம் பேர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைந்து இருக்கிறார்கள் என்றும் மேலும், ஒரு கோடியே 23 லட்சம் பேர் இந்த திட்டத்தின் முலம் கடந்த 13 அண்டுகளில் பயன்பெற்று இருக்கிறார்கள் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கடந்த ஆட்சியில் 970 மருத்துவமனையில் இந்த திட்டம் இருந்த நிலையில், தற்போது 1733 மருத்துவமனையில் இந்த திட்டம் செயல்பட்டு வருவதாகவும் அதேபோல, கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தின் வாயிலாக 1027 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்பொழுது 1513 நோய்களுக்கு இந்த திட்டம் பயன்பட்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறப்பு சிகிச்சையாக 8 சிகிச்சைகளை வழங்கி வருவதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு விதமான உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த திட்டம் சிறப்பாக உதவி வருகிறது என்றார்.

அரசு மனநல காப்பகத்தில் உள்ள 520 பேருக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டை முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில்  பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. செவிலியர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், 100 சதவீதம் அவர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கிறது என்றார்.

மேலும், தற்பொழுது அவர்களுக்கு துறை ரீதியான மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக 3949 காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வெளியாகும் அரசாணை அதற்கு அத்தாட்சி என்றும் தெரிவித்தார்.

3949 செவிலியர்களும் பணியாற்றுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள 38 ஆட்சித் தலைவர்கள் தலைமையில் மாவட்ட சுகாதார சங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

11ம் தேதியிலிருந்து  நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெறும் என்றும், அதில் 3949 இடங்களில் தற்போது எம்.ஆர்.பி. செவிலியர்கள் 1800 பேருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த நேர்காணலில்  40 சதவீதம் மதிப்பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு என்ற அமைச்சர்,  100 சதவீதம் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஏற்கனவே,  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என கூறிய அமைச்சர்,

எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு 14000 லிருந்து 18000 ஆக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

செவிலியர்கள் பணி செய்த அந்தந்த மாவட்டங்களிலேயே பணி அமர்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

MUST READ