
பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டி, பணம் பறித்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் கோவை நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி.பிரமோத் குமார் சரணடைந்தார். திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு, கடந்த 2009- ஆம் ஆண்டு செயல்பட்ட பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம், 931 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.

“தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து”- நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!
இதில் நிதி நிறுவன இயக்குநர்களை மிரட்டி, வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் லட்சம் பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.பிரமோத் குமார், காவல்துறை அதிகாரிகள், டி.எஸ்.பி.யாக இருந்த ராஜேந்திரன், ஆய்வாளராக இருந்த மோகன் ராஜ், இடைத்தரகர்கள் பிரபாகரன், செந்தில் குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டைப் பதிவுச் செய்ய இரண்டு முறை சம்மன் பிறப்பித்தும், பிரமோத் குமார் ஆஜராகாமல் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பிரமோத் குமார் சரணடைந்தார்.
சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி நேரம் நடை அடைப்பு!
இதையடுத்து, அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்துச் செய்த நீதிபதி, வரும் நவம்பர் மாதம் 4- ஆம் தேதி அன்று மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். இதற்கிடையே, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, பிரமோத் குமார் தாக்கல் செய்த மனு, வரும் அக்டோபர் 31- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்.


