Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிக சத்துமாத்திரை சாப்பிட்டு சிறுமி பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

அதிக சத்துமாத்திரை சாப்பிட்டு சிறுமி பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

-

அதிக சத்துமாத்திரை சாப்பிட்டு சிறுமி பலி- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

உதகை அரசு பள்ளியில் அதிக சத்துமாத்திரைகள் உண்டு சிகிச்சையில் இருந்த 13 வயது சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

M.K.Stalin

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உதகையில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஒரு மாத்திரைக்கு பதிலாக மாத்திரை அட்டையையே ஆசிரியர் கொடுத்துள்ளார். போட்டி போட்டு சத்து மாத்திரைகளை மாணவிகள் உட்கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் 70க்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொண்டதாலேயே மாணவி உயிரிழந்துள்ளார். அஜாக்கிரதையாக செயல்பட்ட ஆசிரியர், சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில் உதகையில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிகிச்சை பெற்றுவரும் 3 மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ