Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது!

-

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ. 51,200க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 வரை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 சரிந்து ரூ. 51 ஆயிரத்து 200 க்கு வர்த்தகமாகிறது. இதேபோல்
தங்கம்  கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 400க்கு விற்பனையாகிறது.

இதனிடையே, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.87.50க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.3,500 குறைந்து ரூ.87 ஆயிரத்து 500க்கு வர்த்தகமாகிறது.

 

 

 

 

MUST READ