Homeசெய்திகள்தமிழ்நாடு12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை

-

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை

நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை சட்ட முன்வடிவு குறித்து நாளை தொழிற்சங்கத்துடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன் வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்த தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்த சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கி கூறி இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தொழில்துறை அமைச்சரும் விரிவாக விளக்கம் அளித்தனர்.

இருப்பினும் இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துவருவதால் வரும் 24-4-2023 அன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர், குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ளா முக்கிய தொழிற்சங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ