Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆட்சியும் மாறும்! காட்சிகளும் மாறும்!" – கரூர் கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் கடும்...

“ஆட்சியும் மாறும்! காட்சிகளும் மாறும்!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம்!

-

- Advertisement -

கரூரில் நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தற்போதைய முதல்வர் விஜய் பேசிய பேச்சுக்கு, திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன."ஆட்சியும் மாறும்! காட்சிகளும் மாறும்!" – கரூர் கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம்!

​”127 தொகுதிகளில் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?”
​நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்ததை சுட்டிக்காட்டி, “கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன், முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன்” என முதல்வர் விஜய் கரூரில் ஆணவத்தோடு பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ​இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “தேர்தலுக்கு முன்னால் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சவால் விட்டீர்களே… ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு ‘கொத்து புரோட்டா’ போட்டதை அதற்குள் மறந்துவிட்டீர்களா?” என்று அரசியல் அரங்கில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

we-r-hiring

​7 மணி நேர தாமதமும் 41 பேர் மரணமும்
​கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் மதியம் 12.30 மணிக்கு வருவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட சுமார் 7 மணி நேரம் காலதாமதமாகவே விஜய் கூட்டத்திற்கு வந்துள்ளார். ​அங்கு வந்து வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அவர் பேசிய காணொளியை சுட்டிக்காட்டி, “அன்று கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை முதல்வர் விஜய் தன் மனசாட்சியிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் உங்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்திருப்பார். ஆனால், அவர் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்” என்று திமுக தரப்பு சுட்டிக்காட்டுகிறது."ஆட்சியும் மாறும்! காட்சிகளும் மாறும்!" – கரூர் கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுகவினர் கடும் கண்டனம்!

​”ஊழல்வாதிகளை சேர்ப்பது தூய சக்தியா?” – காரசார கேள்வி
​”தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் ஊழலில் ஒன்றுதான்” என்று கரூரில் தற்போதைய முதல்வர் விஜய் விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கு தற்போதைய அரசியல் சூழலை முன்வைத்து நெட்டிசன்களும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். ​”தீர்ந்து போன கட்சி என்று நீங்கள் விமர்சிக்கும் கட்சியில் இருந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைத் தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்கிறீர்களே… இதற்குப் பெயர் ‘தூய சக்தி’யா? அல்லது ‘தூர்நாற்ற சக்தி’யா?” என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

​விரைவில் மாறும் காலம்!
​இது ஒரு ஜனநாயக நாடு, இங்கு அரசியல் தலைவர்கள் எஜமானர்கள் அல்ல; மக்கள் தான் உண்மையான எஜமானர்கள் என்பதை தற்போதைய ஆளுங்கட்சி மறந்துவிடக் கூடாது. விரைவில் காலமும் மாறும், அரசியல் காட்சிகளும் மாறும், தமிழகத்தில் ஆட்சியும் மாறும் என்று சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

கரூர் மக்களோடு நின்றது யார், ஓடிப் போனது யார் என மக்களுக்குத் தெரியும் – கனிமொழி எம்.பி பேச்சு!

MUST READ