Homeசெய்திகள்தமிழ்நாடுபெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!

பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!

-

- Advertisement -

 

பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!
Video Crop Image

பெட்ரோல் குண்டுவீசசு சம்பவம் தொடர்பாக, ஆளுநர் மாளிகைத் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்துள்ள புகார் மனுவில், “புதன்கிழமை பிற்பகல் 02.45 மணியளவில் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது. பெட்ரோல் குண்டுகளுடன் வந்த மர்மநபர்கள் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் எண் 1 வழியாக நுழைய முயன்ற போது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.

ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. எனினும் பிரதான நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து, அந்த மர்மநபர்களைப் பிடிக்க காவல்துறை விரைந்ததாகவும், அதே நேரம் மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஆளுநர் மாளிகையின் பிராதன நுழைவு வாயில் பகுதி சேதம் அடைந்தது.

“ஆளுநர் மாளிகை வாசலில் என்ன நடந்தது?”- காவல்துறை விளக்கம்!

கடந்த பல மாதங்களாக ஆளுநர் மீது தொடர்ந்து அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் தொடர்ந்து வாய்மொழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக்கூட்டங்களிலும், அவர்களது சமூக ஊடகங்களிலும் முன்வைக்கப்படுகிறது.

ஆளுநரின் அரசியலைப்புச் சட்டப் பணிகளைச் செய்ய விடாமல், அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 18- ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த போது,தடியடி மற்றும் கற்களால் உடல் ரீதியாக ஆளுநர் தாக்கப்பட்டுள்ளார்.

“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் தெரிவித்த போதும், முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்படவில்லை, தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ