ஆளுநர் பதவிக்காலம் முடிவு , மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்
ஐ.பி.எஸ் ரவி, மத்திய உளவுத்துறையான IB-யில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பின்னர் 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டாண்டுகள் பணியாற்றியிருந்த நிலையில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9- ஆம் தேதி அப்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைகிறது. இதனை அடுத்து தன்னுடைய பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து பேசுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் அதற்கு மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டில்லி சென்ற ரவி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்ரவி அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக விமர்சனங்கள் வரத்தொடங்கின. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவரை ஆளுநராக நியமிக்கக்கூடாது என்று கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது.
தாம்பரம் அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை
தொடர்ந்து ஆளுநரின் பல்வேறு கருத்துகள், செயல்பாடுகள் சர்ச்சைக்குள்ளானது. தமிழக அமைச்சரவை மாற்ற விவகாரத்தில் ஆளுநர் தலையிட அதனால் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல், உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ‘GetOutRavi’, ‘கிண்டிக்கு ஒரு கேள்வி’ ‘Postman Ravi’ என தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டத் தொடங்கினர் திமுக கட்சியினர். ஆளுநருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆளுநரை திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்திலும், டெல்லியிலும் பல்வேறு முறச்சிகளை திமுக செய்தது. மதிமுக கையெழுத்து இயக்கம் நடத்திய போது, காங்கிரஸ் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டது. இதை தவிர, திருவள்ளுவர், வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கள் அரசியல் கட்சிகளையும்தாண்டி, பொதுவான பலரின் விமர்சனத்துக்கானது.
இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டால், தமிழக அரசியல் களம் என்ன செய்யும் என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் இடைய தோன்றுகிறது.



ஆளுநர் பதவிக்காலம் முடிவு , மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்