
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர இன்று (செப்.12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் குளறுபடி- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தண்டனை
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 164 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023- 24ம் கல்வியாண்டுக்கான இளநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை சம்மந்தப்பட்ட கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 21- ஆம் தேதி முதல் நடத்தப்பட்டது.
இருப்பினும், சில அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் சில பாடப்பிரிவுகளில் முழுமையாக நிரப்பப்படாமல் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாகவுள்ளன. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, இணையதளங்கள் மூலமாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று (செப்.12) முதல் செப்டம்பர் 14- ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்!
நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை இணையதளத்தில் காணலாம்; விண்ணப்பிப்பதற்கும் கூடுதல் விவரங்களுக்கு www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளப் பக்கங்களை மாணவர்கள் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.