
முன்னெப்போதும் இல்லாத வகையில், தீவிர வெப்ப அலை வீசி வரும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி ரிலீஸ் எப்போது?
குறிப்பாக, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஒரே நேரத்தில் தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?
மே 01- ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகபட்சமாக 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மே 05- ஆம் தேதி தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.