
கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 19) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் எஸ் வி சேகர்!
அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 13.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 8.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பூந்தமல்லியில் 7.4 செ.மீ., செங்குன்றம், ஆவடியில் தலா 3 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் பலத்த காற்று காரணமாக சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் காஜல் அகர்வால்… லேட்டஸ்ட் அப்டேட்!
கனமழை காரணமாக, சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. அதேபோல், கனமழை மற்றும் பலத்த காற்றால் சாலையில் விழுந்தமரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு முதலே மாநகராட்சி ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.