spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?"- விரிவான தகவல்!

“கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?”- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

மக்களே உஷார்...கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!

we-r-hiring

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நேற்று (ஜன.07) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

யோகி பாபு நடிக்கும் ‘தூக்குதுரை’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ராணிப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.08) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.08) விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூரில் நேற்று (ஜன.07) காலை 06.00 மணி முதல் தற்போது வரை 21.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நன்னிலம் 16.4 செ.மீ., குடவாசல் 13.4 செ.மீ. சீர்காழியில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அம்மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன!

ஏற்கனவே, கனமழை காரணமாக, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்களிலும், நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட வட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!

இதனிடையே, புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், புதுச்சேரி மீன்வளத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சுமார் 50,000- க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

MUST READ