Homeசெய்திகள்தமிழ்நாடுஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு

-

- Advertisement -

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் 4வது முறையாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் காங்வார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

81  தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக 21 இடங்களை கைப்பற்றியது. தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், அக்கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், ஆளுநர் சந்தோஷ் காங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில் ராஞ்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் 4வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் கங்குவார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்புக்கு பின்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கலைஞர் குறித்த புத்தகத்தை பரிசளித்து வாழ்த்து கூறினார்.

MUST READ