Homeசெய்திகள்தமிழ்நாடுவீடுகளுக்குள் புகுந்த மழைநீர்....தமிழகத்திலேயே அதிகளவு பெய்த அதி கனமழை எங்கு தெரியுமா?

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்….தமிழகத்திலேயே அதிகளவு பெய்த அதி கனமழை எங்கு தெரியுமா?

-

- Advertisement -

 

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்....தமிழகத்திலேயே அதிகளவு பெய்த அதி கனமழை எங்கு தெரியுமா?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று (ஜன.08) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரம்… திமுக அரசு இரட்டை வேடம்- நாராயணன் திருப்பதி கண்டனம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழகத்திலேயே அதிக அளவாக 24 செ.மீ. அளவுக்கு அதி கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வேளாங்கண்ணியில் 22 செ.மீ. மழையும், திருவாரூர், நாகையில் தலா 21 செ.மீ. அளவுக்கு அதி கனமழை பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கொள்ளிடம், புவனகிரியில் தலா 19 செ.மீ. மழையும், நன்னிலம் 17 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. குடவாசல், மரக்காணம், கொத்தவாச்சேரி மற்றும் புதுச்சேரியில் தலா 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்றும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

தொடர் கனமழை காரணமாக, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில்பத்து பகுதியில் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

MUST READ