spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகணவன், மனைவி தகராறு …செல்போன் டவரில் ஏறிய கணவன்…!

கணவன், மனைவி தகராறு …செல்போன் டவரில் ஏறிய கணவன்…!

-

- Advertisement -

கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த மனைவி. சமரசம் செய்து சேர்த்து வைக்க கோரி நள்ளிரவில் செல்போன் டவர் மீது ஏறிய கணவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.

கணவன், மனைவி தகராறு …செல்போன் டவரில் ஏறிய கணவன்…!

we-r-hiring

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவரது மனைவி ஜீவிதா (வயது 21). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மணைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவிதா, தனது கணவருடன் கோபித்துக் கொண்டு  தனது குழந்தைகளுடன் நேற்று அங்கிருந்து பஸ் ஏறி தனது தாயாரை பார்க்க திருப்பூர் கருமாரம்பாளையத்திற்கு வந்ததாக தெரிகிறது.

மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிரங்கிய துபாய் விமானம் !!

இதையடுத்து விஜயகுமார், மனைவி ஜீவிதாவிற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூறி, அவரும் திருப்பூருக்கு நேற்று இரவு வந்துள்ளார்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்ற விஜயகுமார், தனது மனைவி கோபித்துக் கொண்டு இங்கு வந்துள்ளார். எனவே அவளை சமாதானம் பேசி என்னுடன் அழைத்து வையுங்கள் என்று கூறியுள்ளார்.

உடனே போலீசாரும் ஜீவிதாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜீவிதா மீண்டும்  கோபித்துக் கொண்டு சென்றுள்ளார்.

கணவன், மனைவி தகராறு …செல்போன் டவரில் ஏறிய கணவன்…!இதனால் கடும் விரக்தி அடைந்த விஜயகுமார்,  அதிகாலை 2 மணி அளவில் ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசாருடன் வடக்கு மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் தலைமையில் தலைமை காவலர் இளம் செல்வன், தீயணைப்பு படைவீர்கள் மாவீரன், மோகன்ராஜ், ஹரிஷ், முத்து,  ராகுல்,  சாக்ரடீஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதகமாக செயல்பட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட விஜயகுமாரை பத்திரமாக செல்போன் டவரில் இருந்து மீட்டனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

பின்னர் விஜயகுமார்-ஜீவிதா தம்பதிகள் சமரசம் அடைந்து தங்களது சொந்த ஊரான பென்னாகரத்திற்கு புறப்பட்டு சென்றனர். அதிகாலை நேரத்தில் மழையும் விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ