- Advertisement -
2030-க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; ‘இதுவே என் வாக்குறுதி’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில், “மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனை திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் நோக்கம். மக்களாட்சியின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதே திராவிட மாடல் அரசு. ‘உங்க கனவ சொல்லுங்க’ என்று வீடு தேடி வரவுள்ள எங்களது குழுவிடம் கனவை பகிருங்கள். 2030-க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி. உங்கள் கனவு நனவானால்; தமிழ்நாட்டின் கனவுகள் நனவாகும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கூட்டணி உடைந்தாலும்… ஸ்டாலின் போட்ட கணக்கு! ப்ரியன் நேர்காணல்!


