இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு கங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் குருத்து கூற வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி இருக்கிறது. இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக்கூடாது என்றும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளாா்.

மேலும் இந்தாய கூட்டணி பலவீனப்பட்டால் அது பாஜக கூட்டணிக்கே பலன் தரும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் கடமை, பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளாா்.


