spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம்

வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம்

-

- Advertisement -
வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம்
வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதால் மதகுகளை சரி பார்க்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம்

மதுரை சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருப்பது வைகை அணை. இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 72 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

சித்திரை திருவிழாவை ஒட்டி கள்ளழகர் வைகை ஆற்றல் எழுந்தருளும் நிகழ்வும் இடம்பெற இருப்பதால் தமிழ்நாடு அரசு வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு அடுத்த ஐந்து நாட்களுக்கு 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

வைகை அணை மதகுகளை சரிபார்க்கும் பணி தீவிரம்

இதற்காக அணையின் மதகுகளை இயக்கி பார்த்தும், அணையில் உள்ள அபாய சங்கை ஒலிக்க செய்தும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சித்திரை திருவிழா முடிந்தவுடன் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ